Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ 'ஸ்கிரப் டைபஸ்' காய்ச்சலுக்கு கட்டட மேஸ்திரி பலி

'ஸ்கிரப் டைபஸ்' காய்ச்சலுக்கு கட்டட மேஸ்திரி பலி

'ஸ்கிரப் டைபஸ்' காய்ச்சலுக்கு கட்டட மேஸ்திரி பலி

'ஸ்கிரப் டைபஸ்' காய்ச்சலுக்கு கட்டட மேஸ்திரி பலி

ADDED : ஜூலை 14, 2024 03:28 AM


Google News
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே, 'ஸ்கிரப் டைபஸ்' எனும் காய்ச்-சலால் பாதிக்கப்பட்ட கட்டட மேஸ்திரி பலியானார்.

நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்., வெள்ளக்கல்பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் கந்தசாமி, 58; கட்டட மேஸ்திரி. இவர் தனி-யாக வாசித்து வந்தார். 15 தினங்களுக்கு முன், தொடர் காய்ச்-சலால் அவதிப்பட்டு வந்த கந்தசாமி, சேலத்தில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றார். அங்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கும் குணமடையாததால், சேலம் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு ரத்த பரிசோதனை செய்த டாக்டர்கள், கந்தசாமி, 'ஸ்கிரப் டைபஸ்' (SCRUP TYPHUS) எனும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதை கண்டுபிடித்தனர். அங்கு உள் நோயாளியாக தங்கி சிகிச்சை பெற பரிந்துரை செய்தனர். ஆனால், கந்தசாமி அங்கிருந்து சென்று விட்டார். இரு தினங்க-ளுக்கு முன், நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் இரவு இறந்தார்.

இதுகுறித்து, நாமகிரிப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலை-யத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, நேற்று வெள்ளக்-கல்பட்டிக்கு வந்த சுகாதாரத்துறையினர், டவுன் பஞ்சாயத்து ஊழி-யர்கள் அப்பகுதியில் உள்ள தண்ணீரை தேக்கி வைத்திருந்த பாத்-திரங்கள், டேங்குகளை ஆய்வு செய்தனர். மேலும், சுகாதாரத்-துறை சார்பில் வட்டார மருத்துவர் தயாசங்கர் தலைமையில் மருத்துவ முகாம் நடத்தினர். இதில், அப்பகுதியில் காய்ச்-சலால் பாதிக்கப்பட்டவர்கள், அறிகுறி உள்ளவர்களை கண்ட-றிந்து சிகிச்சை அளித்தனர்.

இதுகுறித்து, சுகாதாரத்துறையினர் கூறுகையில், ''ஸ்கிரப் டைபஸ்' காய்ச்சல், செடி, தண்ணீரில் உள்ள ஒரு வகை பூச்சி கடிப்பதால் வருகிறது. ஆரம்பத்தில் கவனித்து முறையாக சிகிச்சை அளித்தால் பிரச்னை இல்லை. கவனிக்காமல் விடு-வதால் பாதிப்பு அதிகமாகிவிடுகிறது' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us