/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ 'அக்கா வசம் ரூ.1,000 கொடுத்து மச்சானிடம் பல ஆயிரம் ரூபாய் பறிக்கும் ஆட்சி தி.மு.க.,' 'அக்கா வசம் ரூ.1,000 கொடுத்து மச்சானிடம் பல ஆயிரம் ரூபாய் பறிக்கும் ஆட்சி தி.மு.க.,'
'அக்கா வசம் ரூ.1,000 கொடுத்து மச்சானிடம் பல ஆயிரம் ரூபாய் பறிக்கும் ஆட்சி தி.மு.க.,'
'அக்கா வசம் ரூ.1,000 கொடுத்து மச்சானிடம் பல ஆயிரம் ரூபாய் பறிக்கும் ஆட்சி தி.மு.க.,'
'அக்கா வசம் ரூ.1,000 கொடுத்து மச்சானிடம் பல ஆயிரம் ரூபாய் பறிக்கும் ஆட்சி தி.மு.க.,'
ADDED : ஜூலை 14, 2024 03:26 AM
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், பா.ஜ., சார்பில், மோடியை, 3வது முறை-யாக தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம், மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார், பொதுச்செயலாளர் சரவண-ராஜன் தலைமையில் நடந்தது. மாநில துணைத்தலைவர் ராம-லிங்கம், மாநில பொதுச்செயலர் ராமசீனிவாசன் பங்கேற்றனர்.
இதில், மாநில பொதுச்செயலர் ராமசீனிவாசன் பேசியதாவது:
உங்கள் ஓட்டுகளை, 500, 1,000 ரூபாய்க்கு விற்றால், பல கோடி ரூபாயை ஆட்சியாளர்கள் கொள்ளையடித்து விடுவார்கள். தற்போது, 8.5 லட்சம் கோடி கடன் தமிழகத்திற்கு உள்ளது. தி.மு.க., அந்தளவுக்கு ஆட்சி செய்து வருகிறது. பெண்களுக்கு மாதம், 1,000 ரூபாய் கொடுத்து விட்டு, மின்சாரம், பால், பஸ் கட்டணத்தை உயர்த்தி வருகின்றனர். 'அக்கா வசம், 1,000 ரூபாய் கொடுத்து விட்டு, மச்சான் வசம் பல ஆயிரம் ரூபாய் பறிக்கும்' ஆட்சியாக, தி.மு.க., செயல்பட்டு வருகிறது. கர்நாடகாவில், பா.ஜ., ஆட்சியில் இருந்த போது மேகதாதுவில் அணை கட்டு-வது குறித்து யாராவது பேசினார்களா? ஆனால், மேகதாதுவில் அணை கட்டுவோம் என, அறிவித்த காங்., கட்சிக்கு ஆதரவாக, முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். இது வெட்ககேடு.
இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் தங்கவேல், மண்டல தலைவர் சேகர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலசுப்ரமணி, நகர செயலர் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.