/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ வெப்படையில் பராமரிப்பு இல்லாத 'பாழி' பாழாகும் முன் பயன்பாட்டுக்கு வருமா? வெப்படையில் பராமரிப்பு இல்லாத 'பாழி' பாழாகும் முன் பயன்பாட்டுக்கு வருமா?
வெப்படையில் பராமரிப்பு இல்லாத 'பாழி' பாழாகும் முன் பயன்பாட்டுக்கு வருமா?
வெப்படையில் பராமரிப்பு இல்லாத 'பாழி' பாழாகும் முன் பயன்பாட்டுக்கு வருமா?
வெப்படையில் பராமரிப்பு இல்லாத 'பாழி' பாழாகும் முன் பயன்பாட்டுக்கு வருமா?
ADDED : ஜூலை 14, 2024 02:40 AM
பள்ளிப்பாளையம்: வெப்படையில் உள்ள பழமையான பாழியை பராமரித்து பயன்-பாட்டுக்கு கொண்டு வர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
.பள்ளிப்பாளையம் அடுத்த வெப்படையில் பழமையான பாழி உள்ளது. கோடை காலத்திலும் தண்ணீர் வற்றாமல் காணப்-படுகிறது. மக்கள் நாளடைவில் பயன்படுத்தாமல் விட்டதால், கடந்த, 10 ஆண்டுக்கும் மேலாக போதிய பராமரிப்பு இல்-லாமல், பாழியை சுற்றி முட்புதர் வளர்ந்து காணப்படுகிறது. மேலும், குப்பை, இறைச்சி கழிவுகளை கொட்டுவதால், பழமை-யான பாழி பாழாகி வருகிறது. சில ஆண்டுக்கு முன் அதிகாரிகள் நேரில் வந்து, இந்த தண்ணீரை மீண்டும் பொது மக்கள் பயன்ப-டுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க ஆய்வு மேற்கொண்டனர். ஆனால், ஆய்வோடு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காம் நிறுத்-திக்கொண்டனர்.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: பராமரிப்பு இல்-லாததால் பாழி தண்ணீரை பயன்படுத்த முடிய வில்லை. பாழியை சுத்தம் செய்து, குப்பை, இறைச்சி கழிவுகளை கொட்டு-வதை தடை செய்ய வேண்டும். சுற்றிலும் பாதுகாப்பு வேலி அமைத்து, படித்துறை அமைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் இந்த பாழி தண்ணீரில் குளிக்கலாம், துணி துவைக்கலாம், இப்ப-குதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்