Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கல்வி, வேலைவாய்ப்பில் 5 சதவீதம் இடஒதுக்கீடு கேட்டு கூட்டத்தில் தீர்மானம்

கல்வி, வேலைவாய்ப்பில் 5 சதவீதம் இடஒதுக்கீடு கேட்டு கூட்டத்தில் தீர்மானம்

கல்வி, வேலைவாய்ப்பில் 5 சதவீதம் இடஒதுக்கீடு கேட்டு கூட்டத்தில் தீர்மானம்

கல்வி, வேலைவாய்ப்பில் 5 சதவீதம் இடஒதுக்கீடு கேட்டு கூட்டத்தில் தீர்மானம்

ADDED : ஜூன் 06, 2024 04:03 AM


Google News
நாமக்கல்,: 'கல்வி, வேலைவாய்ப்பில், மருத்துவ சமூக சங்கத்திற்கு, 5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்' என, ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு சவர தொழிலாளர்கள் சங்கம் சார்பில், மாநகர புதிய நிர்வாகிகள் தேர்தல், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. மாவட்ட தலைவர் ராமஜெயம் தலைமை வகித்தார்.பொருளாளர் ரமேஷ் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் சுப்ரமணி, துணைத் தலைவர் தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அரசு, கல்வி வேலைவாய்ப்பில், மருத்துவ சமூக சங்கத்திற்கு, 5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும்.அறநிலையத்துறையில் முடி எடுக்கும் ஏல உரிமையையும் மற்றும் முடி எடுப்பவர்கள் அரசு ஊழியர்களாக நியமிக்க வேண்டும். முடி ஏலத்தின் மூலம் கிடைக்கும் வருவாயில், 30 சதவீதம் முடிதிருத்துவோர் நலவாரியத்திற்கு சேர்த்து, உதவி திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும். மாவட்டத்தில் உள்ள சமூக மக்களுக்கு, இலவச வீட்டுமனை, தொழில் கடன், கல்விக்கடன், நலவாரிய சலுகைகளை பெற்றுத்தர கலெக்டரை சந்தித்து மனு அளித்து நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம் கொடுக்கும் இடஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும். சிறிய அளவிலான முடி திருத்தும் நிலையங்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us