/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கொண்டை ஊசி வளைவில் சரிவு நெடுஞ்சாலைத்துறை சீரமைப்பு கொண்டை ஊசி வளைவில் சரிவு நெடுஞ்சாலைத்துறை சீரமைப்பு
கொண்டை ஊசி வளைவில் சரிவு நெடுஞ்சாலைத்துறை சீரமைப்பு
கொண்டை ஊசி வளைவில் சரிவு நெடுஞ்சாலைத்துறை சீரமைப்பு
கொண்டை ஊசி வளைவில் சரிவு நெடுஞ்சாலைத்துறை சீரமைப்பு
ADDED : ஜூன் 06, 2024 04:04 AM
சேந்தமங்கலம்,: கொல்லிமலையில் பெய்த கனமழையால், 22வது கொண்டை ஊசி வளைவில் மண் சரிவு ஏற்பட்டது.
அதனை நெடுஞ்சாலைத்துறை சார்பில் சீரமைக்கும் பணி நடந்தது.நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைக்கு செல்லும் மலைப்பாதையில், 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இங்குள்ள கொண்டை ஊசி வளைவுகளில் அதிக மழை பெய்தால், மண் சரிவு ஏற்படாத வகையில், கட்டு கற்களால் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், கடந்த, 20 நாட்களுக்கு முன் பெய்த கன மழையால், 22வது கொண்டை ஊசி வளைவில் மண் சரிவு ஏற்ப்பட்டது. இதையடுத்து, கொல்லிமலை நெடுஞ்சாலைத்துறையினர், கடந்த, ஒரு வாரமாக மண் சரிவு ஏற்பட்ட கொண்டை ஊசி வளைவில் மீண்டும் பாதிப்பு வராத வகையில், கருங்கற்களால் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் சீரமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்தது.