/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ பஸ் ஸ்டாப்பில் குப்பைகள் அகற்றம்: பயணியர் மகிழ்ச்சி பஸ் ஸ்டாப்பில் குப்பைகள் அகற்றம்: பயணியர் மகிழ்ச்சி
பஸ் ஸ்டாப்பில் குப்பைகள் அகற்றம்: பயணியர் மகிழ்ச்சி
பஸ் ஸ்டாப்பில் குப்பைகள் அகற்றம்: பயணியர் மகிழ்ச்சி
பஸ் ஸ்டாப்பில் குப்பைகள் அகற்றம்: பயணியர் மகிழ்ச்சி
ADDED : ஜூன் 06, 2024 04:03 AM
புதுச்சத்திரம்,: பாப்பிநாய்க்கன்பட்டி பஞ்., அண்ணாநகர் காலனி பஸ் ஸ்டாப் அருகே கொட்டப்பட்ட குப்பைகள் அள்ளப்பட்டதால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதுச்சத்திரம் யூனியன், பாப்பிநாய்க்கன்பட்டி பஞ்., முதலைப்பட்டி பைபாஸ், அண்ணா நகர் காலனி, பஸ் ஸ்டாப் அருகே குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதால் பஸ் ஸ்டாப்பில் காத்திருக்கும் பயணிகள் அவதிப்படுவதாக, கடந்த, 3ல் நமது நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து, பாப்பிநாய்க்கன்பட்டி பஞ்., அண்ணாநகர் காலனி பஸ் ஸ்டாப்பில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள், தற்போது அகற்றப்பட்டதால் துாய்மையாக காணப்படுகிறது. இதனால், பயணிகளும் நிம்மதியடைந்துள்ளனர்.