/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ அரசு மகளிர் கல்லுாரியில் நாளை பொது கலந்தாய்வு அரசு மகளிர் கல்லுாரியில் நாளை பொது கலந்தாய்வு
அரசு மகளிர் கல்லுாரியில் நாளை பொது கலந்தாய்வு
அரசு மகளிர் கல்லுாரியில் நாளை பொது கலந்தாய்வு
அரசு மகளிர் கல்லுாரியில் நாளை பொது கலந்தாய்வு
ADDED : ஜூலை 07, 2024 07:14 AM
நாமக்கல் : 'காலியாக உள்ள இடங்களை நிரப்ப, நாளை பொது கலந்-தாய்வு நடக்கிறது' என, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லுா-ரியில், நடப்பு, 2024-25ம் கல்வி ஆண்டில், இளநிலை பட்ட படிப்புகளுக்கான மாணவியர் சேர்க்கை நடந்து வருகிறது. இன்னும் காலியாக இருக்கக்கூடிய இடங்களுக்கு, நாளை காலை, 9:00 மணிக்கு, பொது கலந்தாய்வு நடக்கிறது.இந்த பொது கலந்தாய்வில், மாணவியர் விண்ணப்பித்திருந்த பாடப்பிரிவுகளில் இடம் கிடைக்கவில்லை என்றால், வேறு பாடப்பிரிவுகளில் உள்ள காலி இடங்களில் சேர்க்கை வழங்கப்-படும். அரசு விதிமுறைகள்படி, இட ஒதுக்கீட்டில் காலியாக இருக்கக்கூடிய இடங்களுக்கு, மாணவியர் வருகை தரவில்லை என்றால், வேறு இனத்தை சேர்ந்த மாணவியர் அரசாணைப்படி அந்த காலி இடத்திலே நிரப்பப்படுவர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.