/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ மாவட்டத்தில் உள்ள 116 நீர் நிலைகளில் இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதி மாவட்டத்தில் உள்ள 116 நீர் நிலைகளில் இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதி
மாவட்டத்தில் உள்ள 116 நீர் நிலைகளில் இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதி
மாவட்டத்தில் உள்ள 116 நீர் நிலைகளில் இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதி
மாவட்டத்தில் உள்ள 116 நீர் நிலைகளில் இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதி
ADDED : ஜூலை 07, 2024 07:14 AM
நாமக்கல், : 'மாவட்டத்தில், 116 நீர் நிலைகளில் இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம்' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மாவட்டத்தில், நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, ஊராட்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 116 அரசு புறம்போக்கு நீர் நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண், களிமண் உள்ளிட்ட-வற்றை, விவசாய பயன்பாட்டிற்கு இலவசமாக எடுத்துச்செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நஞ்சை நிலம் வைத்துள்ள விவசாயிகள், இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை, ஒரு ஏக்கருக்கு, 75 கன மீட்டர் (25 யூனிட்) அளவு வண்டல் மண் எடுத்துக்கொள்ளலாம். புஞ்சை நிலம் வைத்துள்ள விவசாயிகள், ஒரு ஏக்கருக்கு, 90 கன மீட்டர் (30 யூனிட்) வரை வண்டல் மண் எடுத்துக்கொள்ளலாம். மண்பாண்ட தொழிலா-ளர்கள், 60 கன மீட்டர் (20 யூனிட்) வரை கட்டணம் இல்லாமல் வண்டல் மண் எடுத்துக் கொள்ளலாம். விவசாய பயன்பாட்டிற்-காக வண்டல் மண் மற்றும் களிமண்ணை பெற்றுக்கொள்ள விண்-ணப்பிக்கும் நபர், விவசாய நிலம் வைத்துள்ளவராக இருக்க வேண்டும் அல்லது குத்தகை
பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு குத்தகைதாரராக இருக்க வேண்டும்.
நிலத்தின் வகைப்பாடு (நஞ்சை, புஞ்சை), விவசாய நிலத்தின் விஸ்தீரணம் உள்ளிட்ட விபரங்களை சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ.,விடம் சான்று பெற்று, tnsevai.tn.gov.in என்ற இணைய-தள முகவரியில் ஆன்லைன் மூலம் சம்பந்தப்பட்ட தாசில்தா-ரிடம் விண்ணப்பித்து, வண்டல் மண் மற்றும் களிமண் இலவச-மாக துார்வார அனுமதி பெற்று, 30 நாட்களுக்கு மிகாமல் எடுத்துக் கொள்ளலாம்.
விபரங்களுக்கு, தாசில்தார் அலுவலகம், வேளாண் துறை இணை இயக்குனர், கனிம வளங்கள் துறை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.