/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ போராட்டம் நடத்திய பஞ்., தலைவர் கைது போராட்டம் நடத்திய பஞ்., தலைவர் கைது
போராட்டம் நடத்திய பஞ்., தலைவர் கைது
போராட்டம் நடத்திய பஞ்., தலைவர் கைது
போராட்டம் நடத்திய பஞ்., தலைவர் கைது
ADDED : ஜூலை 07, 2024 07:15 AM
சேந்தமங்கலம் : முத்துக்காப்பட்டி - மேதரமா தேவி சாலையை முழுதும் அளவீடு செய்ய வலியுறுத்தி, பஞ்., தலைவர் போராட்டம் நடத்தியதால், அவரை போலீசார் கைது செய்தனர்.
சேந்தமங்கலம் அருகே, முத்துக்காப்பட்டி பஞ்., மேதர மாதேவி சலையை அளவீடு செய்து ஆக்கிரமிப்பு களை அகற்ற வேண்டும் என, பஞ்., தலைவர் அருள்ராஜேஸ் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார். இதையேற்று, நேற்று முன்தினம், ஆர்.ஐ., பிரகாஷ் தலைமையில் அதிகாரிகள் சாலையை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அதிகாரிகள் அளவீடு பணியை பாதியில் நிறுத்தினர்.
இதை கண்டித்தும், அதிகாரிகளை தவறாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், திங்கட்கிழமை முதல் பஞ்., தலைவர் அருள்ராஜேஸ் சேந்தமங்கலம், ஆர்.ஐ., அலுவலகம் முன் போராட்டம் நடத்தி வந்தார். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால், 2வது நாளாக, நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, சேந்தமங்கலம் போலீசார், அருள்ராஜேசை கைது செய்தனர்.