/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ தொழிலாளர் நல உதவிகள் ரூ.3.76 கோடி விடுவிப்பு தொழிலாளர் நல உதவிகள் ரூ.3.76 கோடி விடுவிப்பு
தொழிலாளர் நல உதவிகள் ரூ.3.76 கோடி விடுவிப்பு
தொழிலாளர் நல உதவிகள் ரூ.3.76 கோடி விடுவிப்பு
தொழிலாளர் நல உதவிகள் ரூ.3.76 கோடி விடுவிப்பு
ADDED : ஜூலை 07, 2024 07:15 AM
நாமக்கல் : தேர்தல் காலத்தில் நிறுத்தி வைத்திருந்த தொழிலாளர் ஓய்வூ-தியம், கல்வி உதவித்தொகை என, 3.76 கோடி ரூபாய் விடுவிக்-கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில், தொழிலாளர் நல வாரியத்தில், 3.30 லட்சம் உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர். இதில், 29,000 பேர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். உறுப்பினர்களின் குடும்பத்-தினர் உயர்கல்வி உள்ளிட்ட படிப்புகளுக்கு கல்வி உதவித்-தொகை, திருமண உதவித்தொகை, விபத்து மரணம், இயற்கை மரணம், ஈமச்சடங்கு, மகப்பேறு, குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட நல உதவிகளை பெற்று வருகின்றனர். லோக்சபா தேர்தல் விதி-களால், நலத்திட்ட உதவிகள் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டி-ருந்தன.
இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறை நீங்கியதால், நாமக்கல் மாவட்டத்தில் தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்க-ளுக்கு ஓய்வூதியம், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவித்தொகைகள், மே மாதம் வரை அவரவர் வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த, ஜூன் மாதத்தில் மட்டும் கட்டுமான தொழிலாளர்க-ளுக்கு, 2 கோடியே, 59 லட்சத்து, 76,000 ரூபாயும், உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு, 79.34 லட்சம் ரூபாயும், டிரைவர்-களுக்கு, 37.15 லட்சம் ரூபாய் என மொத்தம், 3 கோடியே, 76 லட்சத்து, 26,000 ரூபாய்க்கு நலத்திட்ட தொகை வழங்கப்பட்-டது.