/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ 'உங்களை தேடி உங்கள் ஊரில்' சேந்தை மக்கள் மனு அளிக்கலாம் 'உங்களை தேடி உங்கள் ஊரில்' சேந்தை மக்கள் மனு அளிக்கலாம்
'உங்களை தேடி உங்கள் ஊரில்' சேந்தை மக்கள் மனு அளிக்கலாம்
'உங்களை தேடி உங்கள் ஊரில்' சேந்தை மக்கள் மனு அளிக்கலாம்
'உங்களை தேடி உங்கள் ஊரில்' சேந்தை மக்கள் மனு அளிக்கலாம்
ADDED : ஜூலை 19, 2024 02:23 AM
நாமக்கல்: 'சேந்தமங்கலம் பி.டி.ஓ., அலுவலகத்தில், இன்று, 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாமில், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்படுகிறது' என, மாவட்ட நிர்வாம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, வெளியிட்ட அறிக்கை:
பொது மக்களுக்கு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் விரைவில் கிடைக்க, 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டம், துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகமும், ஒரு நாள் வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு ஆவணங்களை ஆய்வு செய்து, மக்-களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்-களும், சேவைகளும் தங்கு தடையின்றி மக்களை சென்றடை-வதை உறுதி செய்ய உள்ளது.
அதன்படி, சேந்தமங்கலம் தாலுகாவில், இன்று, 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டம் நடக்கிறது. சேந்தமங்கலம் பி.டி.ஓ., அலுவலகத்தில், மாலை, 4:00 முதல், 6:00 மணி வரை நடக்கும் நிகழ்ச்சிக்கு, கலெக்டர் உமா தலைமை வகிக்கிறார். பொது-மக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.