/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ பட்டியல் படி மாணவர்களுக்கு உணவு வழங்க கலெக்டர் உத்தரவு பட்டியல் படி மாணவர்களுக்கு உணவு வழங்க கலெக்டர் உத்தரவு
பட்டியல் படி மாணவர்களுக்கு உணவு வழங்க கலெக்டர் உத்தரவு
பட்டியல் படி மாணவர்களுக்கு உணவு வழங்க கலெக்டர் உத்தரவு
பட்டியல் படி மாணவர்களுக்கு உணவு வழங்க கலெக்டர் உத்தரவு
ADDED : ஜூலை 19, 2024 02:22 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அக்ரஹாரம் பஞ்.,க்குட்பட்ட பெருமாள்மலை பகுதியில், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்-டத்தில், 90.88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தார்சாலையை, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா, நேற்று ஆய்வு செய்தார். முன்னதாக, மாம்பா-ளையம் பகுதியில் செயல்பட்டு வரும், யூனியன் துவக்கப்பள்-ளிக்கு நேரில் சென்று, பள்ளியில் மாணவ, மாணவியருக்கு வழங்-கப்படும் மதிய உணவை சாப்பிட்டு பார்த்து தரத்தை ஆய்வு செய்தார்.
மேலும், பள்ளியில் பயிலும் மொத்த மாணவர்களின் எண்-ணிக்கை மற்றும் உணவு பட்டியல்படி மதிய உணவு வழங்க வேண்டும். தரமான முறையில் உணவு சமைத்து வழங்க வேண்டும் என, பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.