/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ சென்னை -- போடி எக்ஸ்பிரஸ் ரயில் நாமக்கல்லில் நின்று செல்ல கோரிக்கை சென்னை -- போடி எக்ஸ்பிரஸ் ரயில் நாமக்கல்லில் நின்று செல்ல கோரிக்கை
சென்னை -- போடி எக்ஸ்பிரஸ் ரயில் நாமக்கல்லில் நின்று செல்ல கோரிக்கை
சென்னை -- போடி எக்ஸ்பிரஸ் ரயில் நாமக்கல்லில் நின்று செல்ல கோரிக்கை
சென்னை -- போடி எக்ஸ்பிரஸ் ரயில் நாமக்கல்லில் நின்று செல்ல கோரிக்கை
ADDED : ஜூலை 19, 2024 02:24 AM
நாமக்கல்: 'சென்னையில் இருந்து போடிநாயக்கனுார் வரை இயக்கப்படும், 'சூப்பர் பாஸ்ட்' எக்ஸ்பிரஸ் ரயில், நாமக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ரயில் பய-ணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, வண்டி எண். 20601-20602 'சூப்பர் பாஸ்ட்' எக்ஸ்பிரஸ் ரயில் நாமக்கல் வழி-யாக செல்கிறது. இந்த ரயில், நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, 5 ஆண்டுக-ளாக, நாமக்கல் பகுதி ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை கோரிக்கை நிறைவேறவில்லை.
தற்போது, நாமக்கல்லில் இருந்து சென்னை சென்று வர, 22651-22652 சென்னை சென்ட்ரல் பாலக்காடு - சென்னை சென்ட்ரல் தினசரி ரயில் மற்றும் 12689-12690 சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில். சென்னை சென்ட்ரல் வாராந்திர ரயில் என, இரண்டு ரயில்கள் மட்டுமே உள்ளன. இந்த ரயிலில்
முன்பதிவு டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை.
நாமக்கல் பகுதியில் லாரி, கோழிப்பண்ணை பிரதான தொழிலா-கவும், பள்ளி, கல்லுாரிகள் நிறைந்திருப்பதாலும், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளதாலும், தினமும் ஆயிரக்க-ணக்கானோர் சென்னையில் இருந்து நாமக்கல் வந்து செல்கின்-றனர். சென்னை செல்ல போதிய ரயில் வசதி இல்லாததால், நாமக்கல் - சென்னை இடையே, 50க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பலர் இங்கிருந்து சேலத்திற்கு பஸ்சில் சென்று, சேலம் ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு செல்லவேண்டிய நிலை உள்-ளது.
அதனால், வண்டி எண். 20601 - 20602, சென்னை சென்ட்ரல் - போடிநாயக்கனுார் - சென்னை சென்ட்ரல் ரயிலுக்கு, நாமக்கல் நிறுத்தம் வழங்க வேண்டும் என, ஐந்து ஆண்டுகளாக மத்திய அமைச்சர், எம்.பி.,க்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டு வருகி-றது. இருந்தும், இதுவரை இந்த ரயில் நின்றுசெல்லவில்லை. சேலம் ரயில்வே கோட்ட மேலாளர், தெற்கு ரயில்வே மண்டல மேலாளர் ஆகியோரிடமும், பலமுறை கோரிக்கை வைக்கப்பட்-டுள்ளது. கடந்தமுறை நடந்த, சேலம் கோட்ட அளவிலான, எம்.பி.,க்களுக்கான ஆலோசனை கூட்டத்தில், இந்த ரயிலுக்கு நாமக்கல் நிறுத்தம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதுவும் நிறைவேறவில்லை.
எனவே, 'சென்னை - போடி ரயில், மாவட்ட தலைநகரான நாமக்கல்லில் நின்று செல்ல விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என, ரயில் பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.