/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ நாமக்கல்லில் பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நாமக்கல்லில் பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 19, 2024 02:25 AM
நாமக்கல்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாமக்கல் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் செயல்-படும் சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்தார். அதில், 2024 மார்ச், 28ல் தீர்ப்பு அமலாக்-கத்தில் விடுபட்டுள்ள ஹெச்.இ., - என்.எம்.எஸ்., மற்றும் தகுதி-யுள்ள அனைவருக்கும் முன் தேதியிட்ட பலன் வழங்க வேண்டும்.
சுகாதார ஆய்வாளர் நிலை, இரண்டு பணி நியமனத்தை உடனடி-யாக மேற்கொள்ளும் வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். சுகா-தார ஆய்வாளர் நிலை ஓன்று மற்றும் நிலை இரண்டு பணியிடங்-களுக்கான கூடுதல் ஒப்பளிப்பு கோரி அரசுக்கு அனுப்பப்பட்ட கருத்துருவுக்கான ஒப்புதல் வழங்க வேண்டும். ஒப்பளிக்கப்பட்-டுள்ள, 88 நலக்கல்வியாளர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும்.
தொழில்நுட்ப நேர்முக உதவியாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைளை வலியு-றுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
மாவட்ட செயலாளர் இளவேந்தன், பொருளாளர் குணசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.