/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ இலவச பட்டா கேட்டு மா.திறனாளிகள் போராட்டம் இலவச பட்டா கேட்டு மா.திறனாளிகள் போராட்டம்
இலவச பட்டா கேட்டு மா.திறனாளிகள் போராட்டம்
இலவச பட்டா கேட்டு மா.திறனாளிகள் போராட்டம்
இலவச பட்டா கேட்டு மா.திறனாளிகள் போராட்டம்
ADDED : ஜூலை 17, 2024 09:12 AM
ப.வேலுார் : இலவச வீட்டுமனை பட்டா கேட்டு, ப.வேலுார் தாசில்தார் அலுவலகம் முன், மாற்றுத்திறனா-ளிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் கூட்டமைப்பு தலைவர் பழனிவேல், செயலாளர் கதிர்வேல், பொருளாளர் ஈஸ்வரன் தலை-மையில், 40க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனா-ளிகள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு, ப.வேலுார் தாசில்தார் அலுவலகம் முன் காத்தி-ருப்பு போராட்டம் நடத்தினர். திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., சுகந்தி, ப.வேலுார் தாசில்தார் முத்துக்-குமார், இன்ஸ்பெக்டர் ரங்கசாமி ஆகியோர் பேச்-சுவார்த்தை நடத்தினர். 'இலவச வீட்டு மனை பட்டா கிடைக்க விரைவில் ஏற்பாடு செய்கிறேன்' என, திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., சுகந்தி உத்தர-வாதம் அளித்ததையடுத்து, மாலை, 4:00 மணிக்கு மாற்றுத்திறனாளிகள் கலைந்து சென்றனர்.