/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கர்நாடகா அணைகளில் நீர் திறக்க தமிழக விவசாயிகளுக்கு அழைப்பு கர்நாடகா அணைகளில் நீர் திறக்க தமிழக விவசாயிகளுக்கு அழைப்பு
கர்நாடகா அணைகளில் நீர் திறக்க தமிழக விவசாயிகளுக்கு அழைப்பு
கர்நாடகா அணைகளில் நீர் திறக்க தமிழக விவசாயிகளுக்கு அழைப்பு
கர்நாடகா அணைகளில் நீர் திறக்க தமிழக விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஜூலை 17, 2024 09:11 AM
நாமக்கல், : உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயு-டுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி வெளியிட்ட அறிக்கை: தற்-போது பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக, காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கர்நாடகா அணைகளில் முழு கொள்ளளவு தண்ணீர் உள்ளது.
ஆனால், கர்நாடகா அரசு அனைத்து கட்சி கூட்-டத்தில், தமிழகத்திற்கு, 8,000 கன அடி தண்ணீர் தான் காவிரியில் திறக்க முடியும் என, அறிவித்-துள்ளது. கர்நாடகா முதல்வருக்கு, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமி-ழக விவசாயிகள் சங்கம் சார்பில், பதிலடி கொடுக்கும் வகையில், தமிழக டெல்டா விவசா-யிகளின் உரிமைக்காக, தமிழக விவசாயிகளை ஒன்று திரட்டி, கர்நாடகா சென்று அங்குள்ள அணைகளில் தண்ணீர் திறக்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காவிரி உரிமைக்-காக ரத்தம் சிந்தவும் தயங்கமாட்டோம். தொடர்ந்து, தமிழகத்திற்கு காவிரி நீர் தராமல் வஞ்சித்து வரும் கர்நாடகா அரசுக்கு எச்சரிக்-கையும் விடுக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்-பட்டுள்ளது.