/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ 'பெண்கள் தங்கள் பாதுகாப்பிற்கு யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது' 'பெண்கள் தங்கள் பாதுகாப்பிற்கு யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது'
'பெண்கள் தங்கள் பாதுகாப்பிற்கு யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது'
'பெண்கள் தங்கள் பாதுகாப்பிற்கு யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது'
'பெண்கள் தங்கள் பாதுகாப்பிற்கு யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது'
ADDED : மார் 12, 2025 08:08 AM
மோகனுார்: ''பெண்கள் தங்கள் பாதுகாப்பிற்கு, யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது,'' என, நாமக்கல் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் வேத-பிறவி பேசினார்.
மோகனுார் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில், சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. அதில், பாரம்பரிய உணவு திரு-விழா, கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்-டன. கல்லுாரி முதல்வர் ரவிக்குமார் தலைமை வகித்தார். நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வேதபிறவி பேசியதாவது:
பெண்கள் அனைவரும் வீட்டிலும், பணியிடத்திலும் இரு பெரும் பொறுப்பான பணிகளில் ஈடுபட்டிருக்கிறோம். இவ்விரு பணிகளையும் சிறப்பாக செய்வதற்கு தேவையான மன உறு-தியும், உடல் உறுதியும் வளர்த்துக்கொள்ள வேண்டும். இன்றைய சூழ்நிலையில், பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதித்து வரு-கின்றனர். பெண்களின் பாதுகாப்பு, பெண்களின் கையிலேயே உள்ளது. பெண்கள் தங்கள் பாதுகாப்பிற்கு யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது. மாணவர்கள் பெண்களை மதிப்பதை வீட்டில் இருந்தே தொடங்க வேண்டும். பெற்றோருக்கு மரியாதை கொடுத்து பழக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.நாமக்கல் சர்வம் கல்வி அறக்கட்டளை நிறுவனர்கள் ரம்யா ராதாகிருஷ்ணன், மீனா, மகளிர் சுய உதவிக்குழு பொறுப்பா-ளர்கள், துறை தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.பெண்களின் பாதுகாப்பு, பெண்களின் கையிலேயே உள்ளது. பெண்கள் தங்கள் பாதுகாப்பிற்கு யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது