/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ காற்றில் பறந்த போலீசார் எச்சரிக்கை தொடரும் 'குடி'மகன்களின் அலப்பறை காற்றில் பறந்த போலீசார் எச்சரிக்கை தொடரும் 'குடி'மகன்களின் அலப்பறை
காற்றில் பறந்த போலீசார் எச்சரிக்கை தொடரும் 'குடி'மகன்களின் அலப்பறை
காற்றில் பறந்த போலீசார் எச்சரிக்கை தொடரும் 'குடி'மகன்களின் அலப்பறை
காற்றில் பறந்த போலீசார் எச்சரிக்கை தொடரும் 'குடி'மகன்களின் அலப்பறை
ADDED : மார் 12, 2025 08:08 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் ஆற்றோரமான, நாட்டாகவுண்டன்புதுார், முருகன் கோவில் பகுதி, சந்தைப்பேட்டை உள்ளிட்ட பகுதி-களில் படித்துறை கட்டப்பட்டுள்ளது. இந்த, மூன்று இடங்களும், 'குடி'மகன்களின் பாராக மாறி உள்ளது.
இரவு, பகல் என, எந்த நேரமும் கும்பல் கும்பலாக அமர்ந்து மது அருந்தி வருகின்றனர். இதுகுறித்து மக்கள் கேட்டால், அடி, உதை விழுகிறது. இதனால், படித்துறைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தொடர் புகாரால், நேற்று முன்தினம், பள்ளிப்பா-ளையம் போலீசார் சார்பில், 'இங்கு மது அருந்தினால் காவல் துறையால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. ஆனால், இதை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாத, 'குடி'ம-கன்கள், எச்சரிக்கை பலகையின் கீழேயை அமர்ந்து மது அருந்-தினர். போலீசாரின் எச்சரிக்கையை மீறி, 'குடி'மகன்களின் அலப்-பறை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நேரில் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்-பார்க்கின்றனர்.