/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ வேணுகோபால் சுவாமி திருக்கல்யாண உற்சவம் வேணுகோபால் சுவாமி திருக்கல்யாண உற்சவம்
வேணுகோபால் சுவாமி திருக்கல்யாண உற்சவம்
வேணுகோபால் சுவாமி திருக்கல்யாண உற்சவம்
வேணுகோபால் சுவாமி திருக்கல்யாண உற்சவம்
ADDED : மார் 12, 2025 08:08 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டையில் வரலாற்று சிறப்பு மிக்க வேணு-கோபால் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் ருக்மணி, சத்யபாமா சமேத வேணுகோபால் சுவாமி மற்றும் காசி விஸ்வநாதர் சன்னதிகள் உள்ளன. வேணுகோபால் சுவாமி கோவிலில், மாசி மாதத்தில் திருக்கல்யாண உற்சவம், தேரோட்டம் நடந்து வருகிறது. நேற்று முன்தினம், திருவிழா தொடங்கியது. நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது.
காலை, 10:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் தொடங்கியது. ருக்மணி, சத்தியபாமா, வேணுகோபால் சுவாமிக-ளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பூசாரிகள், ருக்-மணி, சத்தியபாமாவை தாலாட்டி, பாராட்டி பாட்டு பாடினர். அதேபோல், சுவாமிகளுக்கு மாலை மாற்றி திருக்கல்யாணம் செய்து வைத்தனர். மாலை, 6:30 மணிக்கு குதிரை வாகனத்தில் பாரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது.