/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ லட்சுமி நாராயண சுவாமி கோவில் கும்பாபிஷேகம் லட்சுமி நாராயண சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
லட்சுமி நாராயண சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
லட்சுமி நாராயண சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
லட்சுமி நாராயண சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
ADDED : மார் 12, 2025 08:08 AM
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த குருசாமிபாளையம், தோப்புக்காட்டில் ஸ்ரீதேவி பூதேவி சமேத லட்சுமி நாராயண பெருமாள் சுவாமி கோவில் உள்ளது.
இக்கோவிலில், புதிதாக விநாயகர், லட்சுமி நரசிம்மர், லட்சுமி ஹயக்ரீவர், கருடாழ்வார், ஆஞ்சநேயர், புதிய பரிவார மூர்த்திகள், நவகிரகங்கள் மற்றும் சக்கரத்தாழ்வார் சுவாமிகள் அமைக்கப்பட்-டுள்ளன.
இக்கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் யாக சாலையுடன் தொடங்கியது. விநாயகர் பூஜை, தீர்த்தக்குட ஊர்-வலம், கலசம் அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடந்தன. நேற்று காலை, கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.