/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ மன நலத்துடன் கல்வி பயில கலைப்பயிற்சி உதவும் தமிழக கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் பேச்சு மன நலத்துடன் கல்வி பயில கலைப்பயிற்சி உதவும் தமிழக கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் பேச்சு
மன நலத்துடன் கல்வி பயில கலைப்பயிற்சி உதவும் தமிழக கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் பேச்சு
மன நலத்துடன் கல்வி பயில கலைப்பயிற்சி உதவும் தமிழக கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் பேச்சு
மன நலத்துடன் கல்வி பயில கலைப்பயிற்சி உதவும் தமிழக கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் பேச்சு
ADDED : ஜூலை 22, 2024 08:19 AM
நாமக்கல் ; ''மன அழுத்தம் இல்லாமல், உடல் மற்றும் மன நலத்துடன் கல்வி பயில கலைப்பயிற்சிகள் மிகவும் உதவுகிறது,'' என, தமிழக கலை பண்-பாட்டுத் துறை இயக்குனர் காந்தி அறிவுறுத்-தினார்.
நாமக்கல் கோட்டை நகரவை உயர்நிலைப்பள்-ளியில், வாரம்தோறும் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில், 16 வயதிற்கு உட்பட்ட குழந்-தைகளுக்கு, ஜவகர் சிறுவர் மன்றம் மூலம், கராத்தே, யோகா, சிலம்பம், பரதநாட்டியம், ஓவியம், கிராமிய நடனம் போன்ற நுண்கலை பயிற்சி, இலவசமாக அளிக்கப்படுகிறது.
அதேபோல், கொல்லிமலையில் செம்மேடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில், ஜவகர் சிறுவர் மன்ற விரிவாக்க மையமும், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில், கலை வகுப்புகள் நடத்தப்படு-கின்றன. மேலும், தமிழக அரசு, கலை பண்பாட்-டுத்துறை மூலம், குழந்தைகள் கற்றுக்கொள்ள கலை உபகரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழக கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் காந்தி, கலை வகுப்புகளை, நேற்று திடீர் ஆய்வு செய்தார்.அப்போது, 'மன அழுத்தம் இல்லாமல், உடல் மற்றும் மன நலத்துடன் கல்வி பயில கலை பயிற்சிகள் மிகவும் உதவுகிறது. விடுமுறை நாட்களில் ஆர்வமுடன் வந்து, கலைப்பயிற்-சியில் கலந்து கொள்ள வேண்டும்' என, அறிவு-றுத்தினார்.நாமக்கல் மாவட்ட திட்ட அலுவலர் தில்லை சிவக்குமார், ஓவிய ஆசிரியர்கள் வெங்கடேஷ், விஜயகுமார், கிராமிய நடன ஆசிரியர் பாண்டிய-ராஜன், தற்காப்பு கலை ஆசிரியர்கள் ராமசந்-திரன், சரவணன், பரதநாட்டிய ஆசிரியர் தேவ-யாணி, ஸ்ரீமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.