/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கொல்லிமலையில் நீட்டிக்கப்பட்ட வழித்தடத்தில் பஸ் வசதி துவக்கம் கொல்லிமலையில் நீட்டிக்கப்பட்ட வழித்தடத்தில் பஸ் வசதி துவக்கம்
கொல்லிமலையில் நீட்டிக்கப்பட்ட வழித்தடத்தில் பஸ் வசதி துவக்கம்
கொல்லிமலையில் நீட்டிக்கப்பட்ட வழித்தடத்தில் பஸ் வசதி துவக்கம்
கொல்லிமலையில் நீட்டிக்கப்பட்ட வழித்தடத்தில் பஸ் வசதி துவக்கம்
ADDED : ஜூலை 22, 2024 08:19 AM
சேந்தமங்கலம் ; கொல்லிமலை யூனியன், பெரப்பன்சோலை மற்றும் பெத்தநாயக்கன்பட்டியில், தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில், பஸ் வழித்த-டங்கள் நீட்டிப்பு விழா நடந்தது. எம்.பி.,க்கள் ராஜேஸ்குமார், மாதேஸ்வரன் கலந்து கொண்-டனர். வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், நீட்-டிக்கப்பட்ட வழித்தடத்தில் அரசு பஸ் வசதியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ஏற்கனவே, தம்மம்பட்டி, நாரைக்கிணறு, ராஜபா-ளையம், மெட்டாலா உள்ளிட்ட வழித்தடங்களில் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ், நாரைக்கிணறு, பிலிப்பாக்குட்டை, கப்பலுாத்து உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில், அப்பகுதிகளுக்கும் நீட்-டிக்கப்பட்டுள்ளது. தம்மம்பட்டியில் இருந்து, காலை, 7:00 மணி முதல், மாலை, 4:40 மணி வரை பஸ் இயக்கும் வகையில் வழித்தடம் நீட்-டிக்கப்பட்டுள்ளது.இதேபோல், தம்மம்பட்டி, முள்ளுக்குறிச்சி, பெரி-யகோம்பை உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்-கப்பட்டு வந்த பஸ், முள்ளுக்குறிச்சி முதல் பெரப்பன்சோலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.