/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ் பணி டிரைவர், உதவியாளர் 82 பேர் தேர்வு நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ் பணி டிரைவர், உதவியாளர் 82 பேர் தேர்வு
நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ் பணி டிரைவர், உதவியாளர் 82 பேர் தேர்வு
நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ் பணி டிரைவர், உதவியாளர் 82 பேர் தேர்வு
நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ் பணி டிரைவர், உதவியாளர் 82 பேர் தேர்வு
ADDED : ஜூலை 03, 2024 07:46 AM
நாமக்கல்,: நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ் பணிக்கு நடந்த நேர்முக தேர்வில், 170 பேர் பங்கேற்றனர். அதில், டிரைவர், ஆம்புலன்ஸ் உதவியாளர் என, 82 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழக அரசின், '1962' இலவச கால்நடை ஆம்புலன்ஸ் ஊர்தி சேவை திட்டமானது, அவசர சிகிச்சை தேவைப்படும் கால்நடை-களின் உயிரை காக்கும் நோக்கில், முன்னாள் முதல்வர் ஜெயல-லிதா, 2016ல் அறிமுகப்படுத்தினார்.
இந்த மருத்துவ ஆம்புலன்சில், ஒரு கால்நடை மருத்துவர், கால்-நடை உதவியாளர், டிரைவர் ஆகியோர் தயார் நிலையில் இருப்பர். காலை, 8:00 முதல் இரவு, 8:00 மணி வரை இயக்கப்-பட்டாலும், 24 மணி நேரமும், கால்நடைகளுக்கான மருத்துவ உதவிகளை பெற, இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இந்த சேவைக்கான டிரைவர், ஆம்புலன்ஸ் உதவியாளர் பணிக்-கான நேர்முக தேர்வு, நாமக்கல் - மோகனுார் சாலையில் உள்ள பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள, '108' அவசர-கால ஆம்புலன்ஸ் சேவை அலுவலகத்தில், நேற்று நடந்தது. மண்டல மேலாளர் அறிவுக்கரசு தலைமை வகித்தார். நாமக்கல் மாவட்ட மேலாளர் சின்னமணி, சேலம் மாவட்ட மேலாளர் மனோஜ், வாகன பராமரிப்பு மேலாளர் மணிராஜ் ஆகியோர் முன்-னிலை வகித்தனர்.
நாமக்கல், திருச்சி, ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த, 170க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களிடம், டிரைவிங் லைசென்ஸ், கல்விச்சான்று, உயரம் சரிபார்க்கப்பட்டு, வாகனம் ஓட்டி பரிசோதனை செய்யப்பட்டது. முடிவில், டிரைவர்களுக்-கான தேர்வில், 18 பேர், உதவியாளர் பணிக்கு, 64 பேர் என, மொத்தம், 82 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
'தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, சென்னையில் ஒரு வார காலம் முறையான பயிற்சி அளிக்கப்பட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பணியில் அமர்த்தப்படுவர்' என, நிர்வாகிகள் தெரிவித்தனர்.