/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ மல்லசமுத்திரம் மஹேந்ரா தொழில்நுட்பக் கல்லுாரியில் 14வது பட்டமளிப்பு விழா மல்லசமுத்திரம் மஹேந்ரா தொழில்நுட்பக் கல்லுாரியில் 14வது பட்டமளிப்பு விழா
மல்லசமுத்திரம் மஹேந்ரா தொழில்நுட்பக் கல்லுாரியில் 14வது பட்டமளிப்பு விழா
மல்லசமுத்திரம் மஹேந்ரா தொழில்நுட்பக் கல்லுாரியில் 14வது பட்டமளிப்பு விழா
மல்லசமுத்திரம் மஹேந்ரா தொழில்நுட்பக் கல்லுாரியில் 14வது பட்டமளிப்பு விழா
ADDED : மார் 14, 2025 01:52 AM
மல்லசமுத்திரம் மஹேந்ரா தொழில்நுட்பக் கல்லுாரியில் 14வது பட்டமளிப்பு விழா
மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம், மஹேந்ரா தொழில்நுட்பக் கல்லுாரியின், 14வது பட்டமளிப்பு விழா மகாத்மா காந்தி கலையரங்கில், கல்லுாரி தலைவர் பரத் குமார் தலைமையில் நடந்தது.
பொறியியல் விழாவில் தலைமை விருந்தினராக ஜெர்மனியை சேர்ந்த டாக்டர். பெர்ன்ஹார்ட் க்ளூக் பங்கேற்று பேசியதாவது: உங்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சி பலனளித்துள்ளன. மேலும் நீங்கள் பொறியியலில் பட்டம் பெற்றுள்ளீர்கள். சிக்கலான பிரச்னைகளை தீர்க்கவும், விமர்சன ரீதியாக சிந்திக்கவும், புதுமைப்படுத்தவும் உங்கள் திறனுக்கு இது ஒரு சான்றாகும். எதிர்காலத்தை வடிவமைக்கவும், புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கவும் உங்களுக்கு சக்தி உள்ளது. நீங்கள் முன்னேறும்போது, புதுமை என்பது தொழில்நுட்பத்தை பற்றியது மட்டுமல்ல, மனநிலையை பற்றியது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். தைரியமாக இருங்கள், அச்சமின்றி இருங்கள், சவால்களை எதிர்கொள்ள தயாராக இருங்கள்.
இவ்வாறு பேசினார்.விழாவில் கல்லுாரி செயல் இயக்குனர் டாக்டர் சாம்சங் ரவீந்திரன், முதல்வர்கள் இளங்கோ, செந்தில்குமார், புல முதல்வர் ராஜவேல், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். மாணவ மாணவியர் பட்டங்களை பெற்றனர்.