/உள்ளூர் செய்திகள்/மயிலாடுதுறை/ சீர்காழி அரசு மருத்துவமனையில் ஊசி போட்ட பெண்கள் மயக்கம் சீர்காழி அரசு மருத்துவமனையில் ஊசி போட்ட பெண்கள் மயக்கம்
சீர்காழி அரசு மருத்துவமனையில் ஊசி போட்ட பெண்கள் மயக்கம்
சீர்காழி அரசு மருத்துவமனையில் ஊசி போட்ட பெண்கள் மயக்கம்
சீர்காழி அரசு மருத்துவமனையில் ஊசி போட்ட பெண்கள் மயக்கம்

மயிலாடுதுறை: சீர்காழி அரசு மருத்துவமனையில் ஊசி போட்ட பெண்களுக்கு திடீரென நடுக்கம், காய்ச்சல் ஏற்பட்டதால் உறவினர்கள் அச்சமடைந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனையில் அரசு தாய்சேய் நல மையம் இயங்கி வருகிறது. இங்கு மகப்பேறு மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக கர்ப்பிணி பெண்கள் வந்து செல்கின்றனர். நேற்று இரவு வார்டில் சிகிச்சை பெற்ற கர்ப்பிணி மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு மருத்துவர்கள் ஊசி போட்ட பிறகு, திடீரென நடுக்கம், காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்து வந்த தலைமை மருத்துவர் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் நடுக்கம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது குறித்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாற்று மருந்து கொடுத்தனர். சிறிது நேரம் கழித்து 30க்கும் மேற்பட்டோர் உடல்நிலை சீரான நிலையில், 2 பேர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.
இச்சம்பவம் மகப்பேறு மையத்தில் சேர்க்கப்பட்டுள்ள பெண்களின் குடும்பத்தினரிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது.பெண்களுக்கு போடப்பட்ட ஊசி மருந்து ஆய்வுக்கு உட்படுத்த மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்;
நேற்று 27 பயனாளிகளுக்கு cefataxim, Ceftrioxzone ஆகிய மருந்துகள் மற்றும் மாத்திரைகள் காலை, இரவு என இருவேளைகளில் வழங்கப்பட்டன. இரவு திடீரென மருந்துகளை எடுத்துக் கொண்ட 27 பெண்களுக்கும் குளிர்க்காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து உடனடியாக தலைமை மருத்துவருக்கு தெரிவிக்கப்பட்டு, மருத்துவ குழுவினரால் அனைவருக்கும் மாற்று மருந்துகளான Inj.Chlophereramine, Inj. Dexamethasone, Inj.Hydrocartisone வழங்கப்பட்டது.
பிரவசத்திற்காக அனுமதிக்கப்பட்ட 9 கர்ப்பிணிகளில் ஒருவருக்கு ப்ரீமெச்சூர் என்பதால், அவருக்கும் மாற்று மருந்துகள் வழங்கப்பட்டு, கடலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
பின்னர் 2 மணி நேரத்திற்க்கு பிறகு மருத்துவக்குழுவால் ஆய்வு செய்ததனில் அனைத்து பயனாளிகளும் நல்ல உடல் தகுதியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து, மயிலாடுதுறை கலெக்டர் மற்றும் மயிலாடுதுறை இணை இயக்குநரும் பாதிக்கப்பட்டோர் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்,இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.