/உள்ளூர் செய்திகள்/மயிலாடுதுறை/ வாலிபர் கொலையில் காதலியின் தாய் உட்பட நான்கு பேர் கைது வாலிபர் கொலையில் காதலியின் தாய் உட்பட நான்கு பேர் கைது
வாலிபர் கொலையில் காதலியின் தாய் உட்பட நான்கு பேர் கைது
வாலிபர் கொலையில் காதலியின் தாய் உட்பட நான்கு பேர் கைது
வாலிபர் கொலையில் காதலியின் தாய் உட்பட நான்கு பேர் கைது
ADDED : செப் 18, 2025 02:57 AM

மயிலாடுதுறை:மயிலாடுதுறை அருகே காதலன் கொலை வழக்கில், காதலியின் தாய், சகோதரன் உட்பட, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை அருகே அரியமங்கலத்தை சேர்ந்தவர் குமார் மகன் வைரமுத்து, 28; டூ - வீலர் மெக்கானிக். இவர், அதே பகுதியை சேர்ந்த மாலினி, 26 என்ற பெண்ணை காதலித்தார். மாலினி குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்தனர். செப்., 15 இரவு, வைரமுத்து வேலை முடிந்து வீட்டிற்கு சென்றபோது, ஒரு கும்பல் அவரை வழிமறித்து வெட்டி கொன்றது.
போலீஸ் விசாரணையில், மாலினி குடும்பத்தார் வைரமுத்துவை கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து, குற்றவாளிகளை கைது செய்யவும், மாலினியின் தாய் மீது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதியக்கோரி, வைரமுத்து குடும்பத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை போலீசார், மாலினியின் சகோதரர் குகன், 21; சித்தப்பா பாஸ்கர், 42; தாய் விஜயா, 45; அதே ஊரை சேர்ந்த அன்புநீதி, 19; ஆகிய நால்வரை கைது செய்தனர்.
பெண்ணின் தாய் விஜயா, மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.