/உள்ளூர் செய்திகள்/மயிலாடுதுறை/ வாலிபர் கொலை வழக்கு: பழங்குடியினர் நல ஆணையம் விசாரணை மயிலாடுதுறை வாலிபர் கொலை வழக்கு பழங்குடியினர் நல ஆணையம் விசாரணை வாலிபர் கொலை வழக்கு: பழங்குடியினர் நல ஆணையம் விசாரணை மயிலாடுதுறை வாலிபர் கொலை வழக்கு பழங்குடியினர் நல ஆணையம் விசாரணை
வாலிபர் கொலை வழக்கு: பழங்குடியினர் நல ஆணையம் விசாரணை மயிலாடுதுறை வாலிபர் கொலை வழக்கு பழங்குடியினர் நல ஆணையம் விசாரணை

ADDED : செப் 20, 2025 02:43 AM
மயிலாடுதுறை:மயிலாடுதுறை அடுத்த அடியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வைரமுத்து, 28; டூ - வீலர் மெக்கானிக். இவர், அதே கிராமத்தை சேர்ந்த மாலினி, 26, என்ற பெண்ணை காதலித்து வந்தார். இந்த பிரச்னை தொடர்பாக வைரமுத்து செப்., 15ல் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இரு தரப்பினருமே பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற போதிலும் மாலினியின் தாய் விஜயா மட்டும் மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிந்து விஜயா, 45, அவரது மகன் குகன், 24, இவரது நண்பர் அன்பு நிதி, 19, மாலினியின் சித்தப்பா பாஸ்கர், 42, ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட வைரமுத்துவின் குடும்பத்தினரை தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணைய இயக்குனர் ரவிவர்மன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அவர் எஸ்.சி., - எஸ்.டி., வழக்கு தொடர்பாக பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.