/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இளைஞர் நீதிகுழுமத்தில் உறுப்பினராக சேரலாம் இளைஞர் நீதிகுழுமத்தில் உறுப்பினராக சேரலாம்
இளைஞர் நீதிகுழுமத்தில் உறுப்பினராக சேரலாம்
இளைஞர் நீதிகுழுமத்தில் உறுப்பினராக சேரலாம்
இளைஞர் நீதிகுழுமத்தில் உறுப்பினராக சேரலாம்
ADDED : செப் 10, 2025 02:00 AM
மதுரை : மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூகப் பணி உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளதால் தகுதி வாய்ந்தோர் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பிரவீன் குமார் அறிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: இளைஞர் நீதிகுழுமத்திற்கு ஒரு பெண் உட்பட 2 சமூகப் பணி உறுப்பினர்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். இது அரசு பதவி அல்ல. விண்ணப்பதாரர்கள் குழந்தைகள் தொடர்பான உடல்நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் ஈடுபாடு கொண்டிருப்பது அவசியம்.
அல்லது குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகிய ஏதாவது ஒன்றில் பட்டம் பெற்று தொழில்புரிபவராக இருக்க வேண்டும். 35 வயதுக்கு குறையாதவராக, 65 வயதை பூர்த்தி செய்யாதவராக இருக்க வேண்டும்.
விண்ணப்ப படிவத்தை மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பெறலாம். அல்லது இணையதள முகவரியில் (https://dsdcpimms.tn.gov.in) பதிவிறக்கம் செய்யலாம். அதனை செப்.15 க்குள், 'இயக்குனர், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, எண் 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை- 600 010' என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்,