/உள்ளூர் செய்திகள்/மதுரை/ 'நெட்' வசதியில்லா அரசு பள்ளிகளில் ஏ.ஐ., வகுப்புகளை நடத்துவது எப்படி; தலைமையாசிரியர்கள் 'கிறு கிறு' 'நெட்' வசதியில்லா அரசு பள்ளிகளில் ஏ.ஐ., வகுப்புகளை நடத்துவது எப்படி; தலைமையாசிரியர்கள் 'கிறு கிறு'
'நெட்' வசதியில்லா அரசு பள்ளிகளில் ஏ.ஐ., வகுப்புகளை நடத்துவது எப்படி; தலைமையாசிரியர்கள் 'கிறு கிறு'
'நெட்' வசதியில்லா அரசு பள்ளிகளில் ஏ.ஐ., வகுப்புகளை நடத்துவது எப்படி; தலைமையாசிரியர்கள் 'கிறு கிறு'
'நெட்' வசதியில்லா அரசு பள்ளிகளில் ஏ.ஐ., வகுப்புகளை நடத்துவது எப்படி; தலைமையாசிரியர்கள் 'கிறு கிறு'
ADDED : செப் 10, 2025 02:02 AM
மதுரை : மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) தொழில்நுட்பம் குறித்த வகுப்புகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பெரும்பாலான கிராம பள்ளிகளில் இணைய வசதி இல்லாததால் இவ்வகுப்பை எவ்வாறு நடத்துவது எனத் தெரியாமல் தலைமையாசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
அரசு, உதவி பெறும் பள்ளிகளில் 'செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் இணையக் கருவிகள் அறிவுத் திட்டம்' (டி.என்., ஸ்பார்க்) இக்கல்வியாண்டில் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி 6 முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,), கோடிங், இணையக் கருவிகள் குறித்த வகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மதுரையில் அரசு, உதவிபெறும் ஆயிரக்கணக்கான பள்ளிகளில் இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. ஏ.ஐ., தொழில்நுட்ப வகுப்பு நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்பில் அனைத்து பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான கூட்டம் இணையவழியில் நேற்று நடந்தது.
அப்போது, அனைத்து பள்ளிகளிலும் வாரம் 2 நாள் ஏ.ஐ., வகுப்புகளை நடத்த வேண்டும். இதற்காக 2 ஆசிரியர்கள் பிரத்யேக பயிற்சி பெற்று சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
அப்போது கிராமப் பகுதி தலைமையாசிரியர்கள் சிலர், 'பெரும்பாலான பள்ளிகளில் இணைய சேவை வசதியே இன்னும் கிடைக்கவில்லை. இதனால் ஏற்கனவே துவங்கப்பட்ட ஹைடெக் லேப்கள் பல மாதங்களாக செயல்படாமல் முடங்கியுள்ளன. இதில் ஏ.ஐ., தொழில்நுட்ப வகுப்புகளை எவ்வாறு நடத்துவது' என கேள்வி எழுப்பினர்.
தற்போதைய நிலையில் இணையசேவை இல்லாமல் அலங்காநல்லுார், வாடிப்பட்டி, திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, கள்ளிக்குடி உள்ளிட்ட ஒன்றியங்களில் 72 அரசு பள்ளிகள் உள்ளதாக அந்தக் கூட்டத்தில் தெரிவித்துள்ளனர். ஆனாலும் அதிகாரிகள் தீர்வு சொல்லவில்லை.
தலைமையாசிரியர்கள் கூறியதாவது: அரசு பள்ளிகள் அமைந்துள்ள பகுதிக்கு ஏற்ப அப்பகுதியில் கிடைக்கும் தனியார் இணையசேவை வசதியை பயன்படுத்தினர்.
ஆனால் பி.எஸ்.என்.எல்., இணையத்தை தான் பயன்படுத்த வேண்டும் என பிப்ரவரியில் உத்தரவிடப்பட்டது. பல கிராமங்களில் பி.எஸ்.என்.எல்., சேவை இணைப்பு இல்லை. இணைப்பு பெற ரூ.1 லட்சத்திற்கு மேல் செலாவாகும் என்கின்றனர்.
அந்த செலவை யார் ஏற்பது என்ற கேள்வியால் நுாற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் இணையசேவை இல்லை. ஹெடெக் லேப்களே செயல்படாத நிலையில் ஏ.ஐ., வகுப்புகளை எப்படி நடத்துவது. இத்துறையில் கமிஷனுக்காக ஏதாவது திட்டங்களை அதிகாரிகள் கொண்டுவந்த பின் தான் அதை எவ்வாறு பள்ளிகளில் செயல்படுத்த வேண்டும் என்ற ஆலோசனையே நடத்துகின்றனர். இந்நிலை மாற வேண்டும் என்றனர்.