/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் சுவாமி சிலைகள் அகற்றம் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் சுவாமி சிலைகள் அகற்றம்
பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் சுவாமி சிலைகள் அகற்றம்
பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் சுவாமி சிலைகள் அகற்றம்
பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் சுவாமி சிலைகள் அகற்றம்
ADDED : செப் 10, 2025 01:59 AM

உசிலம்பட்டி : உசிலம்பட்டியில் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப்பணிகள் ரூ. 8 கோடி மதிப்பில் 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. விரிவாக்கத்திற்கு மேலும் ஒரு ஏக்கர் தேவைப்பட்டதால் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் இருந்த 7 ஏக்கர் 85 சென்ட் பரப்புள்ள சந்தை திடல் அரசு உத்தரவுபடி நகராட்சி நிர்வாகத்திற்கு மாற்றப்பட்டது.
நேற்று விரிவாக்க பணிகளின் ஒருபகுதியாக சந்தை திடலில் அரசமரத்தடி விநாயகர், வேப்பமரத்தடி இரகாமன் சிலைகள் அகற்றப்பட்டன. பஸ் ஸ்டாண்டின் ஒருபகுதியில் மீண்டும் சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் என நகராட்சி கமிஷனர் இளவரசன், பொறியாளர் சசிகுமார் உறுதியளித்தனர்.