Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஜூன் 4 முதல் யோகா

ஜூன் 4 முதல் யோகா

ஜூன் 4 முதல் யோகா

ஜூன் 4 முதல் யோகா

ADDED : ஜூன் 01, 2025 03:48 AM


Google News
மதுரை: மதுரை தெப்பக்குளம் கீதாநடனகோபால நாயகி மந்திரில் மகாத்மா காந்தி யோகா நிறுவனம் சார்பில் எல்லா வயதினரும் மிக எளிமையாக செய்யக்கூடிய ஆசனங்கள், ஓய்வு உத்திகள், பிராணாயாமம், தியானப்பயிற்சிகள் ஜூன் 4 முதல் தினமும் காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை பயிற்றுவிக்கப்படுகிறது.

பெண்களுக்கு மட்டும் தினமும் காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை தெப்பக்குளம் டாக்டர் கோகுல்நாத் பாலாஜி நர்சிங் ஹோமில் நடக்கிறது. உயர் ரத்தஅழுத்தம், நீரழிவு நோய், சுவாசப் பிரச்னைகள், மூட்டு வலி, முதுகுவலி, கருப்பை கோளாறுகள், ஹார்மோன் பிரச்னைகள், உடல் பருமன், மனஅழுத்தத்தில் இருந்து தீர்வு காண இப்பயிற்சி உதவும். முன்பதிவுக்கு இயக்குனர் கே.பி. கங்காதரனை 88834 21666ல் தொடர்பு கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us