ADDED : ஜூன் 01, 2025 03:48 AM

சோழவந்தான்:'சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தில் மூடப்பட்ட சாக்கடையை சரி செய்து கழிவுநீர் செல்ல வழி ஏற்படுத்த வேண்டும்' என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
முருகன்: இங்கு உள்ள பால்பண்ணை தெரு, கருப்பசாமி கோயில் பின்புற தெரு, மேலக்கால் மெயின் ரோடு பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. முன்பு கருப்பசாமி கோயில் சுற்றுச்சுவர் ஓரம் சாக்கடை செல்லும். 4 ஆண்டுகளுக்கு முன்பு நிழற்குடை அமைப்பதற்காக அவ்வழியே சென்ற சாக்கடை மூடப்பட்டு தற்காலிகமாக மேட்டுப்பகுதியில் செல்லும் மாற்றுப்பாதையில் விடப்பட்டது. மூடப்பட்ட சாக்கடை தற்போது வரை திறக்கப்படவில்லை. தற்காலிகமாக அமைக்கப்பட்ட பாதையில் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்குகிறது. மழைக்காலங்களில் கழிவு நீர் முழங்கால் வரை தேங்கி நிற்கும். அனைத்து அதிகாரிகளிடமும் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்றார்.