
மேலுார்:திருவாதவூர் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு நேற்று(மே 31) கொடியேற்றம் நடந்தது.
முன்னதாக பல்லக்கில் கோயிலை சுற்றி வந்து பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்தார். பிறகு கொடி மரத்திற்கு 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டு தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை இணை கமிஷனர் கிருஷ்ணன், அறங்காவலர் செல்லையா, பேஷ்கார் ஜெயபிரகாஷ் செய்திருந்தனர்.