ADDED : ஜூன் 01, 2025 03:50 AM
கொட்டாம்பட்டி: வஞ்சிநகரம் ஊராட்சி உசிலம்பட்டியில் 10க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. நேற்று வீட்டின் முன் நின்ற 7 வயது சிறுவனை நாய் ஒன்று விரட்டி கடித்ததில் கை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது.
தவிர ஜானகி, ஜோதி ஆகியோரின் 5 கோழிகள், ஆடு, குட்டிகள், கோயில் காளையையும் கடித்தது. கால்நடைகளை பாதுகாக்க மக்கள் இரவு முழுவதும் காவல் காக்கின்றனர். கம்புடன் மக்கள் நடந்து செல்கின்றனர். தெரு நாய்களையும், வெறி நாய்களையும் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.