/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இடையபட்டி கோயில் காடு பல்லுயிர் தளமாக்கப்படுமா இடையபட்டி கோயில் காடு பல்லுயிர் தளமாக்கப்படுமா
இடையபட்டி கோயில் காடு பல்லுயிர் தளமாக்கப்படுமா
இடையபட்டி கோயில் காடு பல்லுயிர் தளமாக்கப்படுமா
இடையபட்டி கோயில் காடு பல்லுயிர் தளமாக்கப்படுமா
ADDED : மார் 23, 2025 03:50 AM
மதுரை: உலக காடுகள் தினத்தை முன்னிட்டு மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை, வெள்ளிமலைக் கோயில் காடு பாதுகாப்பு இயக்கம் சார்பில் இடையபட்டி வெள்ளி மலையாண்டி கோயில்காட்டில் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.
உறுப்பினர்கள் கார்த்திகேயன், தமிழ்தாசன் கூறியதாவது: மதுரை மாவட்டத்தில் 70க்கும் மேற்பட்ட கோயில் காடுகள் உள்ளன. அதில் 50க்கும் மேற்பட்டவை தரிசு, புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்டுள்ளதால் எப்போது வேண்டுமானாலும் வளர்ச்சி திட்டங்களுக்காக கையகப்படுத்தி அழிக்கப்படலாம்.
மாவட்டத்தின் பெரிய கோயில் காடான இடையபட்டி வெள்ளிமலைக் கோயில் காட்டில் உசிலை மரங்கள் அடர்ந்தும் கடம்பம், தேத்தா, குறிச்சி உள்ளிட்ட அரிய மரங்களும் உள்ளன. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு கழகம் (ஐ.யு.சி.என்.) சாம்பல் நிற தேவாங்குகளை அழிவின் விளிம்பில் உள்ள உயிரினமாக அறிவித்துள்ளது.
இவை வெள்ளிமலைக் கோயில்காட்டில் பரவலாக வாழ்கின்றன. 2000 ஏக்கர் பரப்புள்ள வெள்ளி மலையாண்டி முருகன் கோயிலுக்குரிய இக்காட்டை தரிசு நிலமாக அரசு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை பல்லுயிரிய மரபு தளமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இதுகுறித்து தீர்மானமும் நிறைவேற்றி உள்ளோம் என்றனர். உறுப்பினர்கள் பாரதி, கார்த்திக் உட்பட பலர் பங்கேற்றனர்.