/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நாங்க நல்லா இருக்கணும்னு தி.மு.க., நினைக்காது செல்லுார் ராஜூ பேட்டி நாங்க நல்லா இருக்கணும்னு தி.மு.க., நினைக்காது செல்லுார் ராஜூ பேட்டி
நாங்க நல்லா இருக்கணும்னு தி.மு.க., நினைக்காது செல்லுார் ராஜூ பேட்டி
நாங்க நல்லா இருக்கணும்னு தி.மு.க., நினைக்காது செல்லுார் ராஜூ பேட்டி
நாங்க நல்லா இருக்கணும்னு தி.மு.க., நினைக்காது செல்லுார் ராஜூ பேட்டி
ADDED : மார் 23, 2025 03:50 AM
மதுரை : ''எங்களுக்கு எதிரி தி.மு.க., தான். அவர்களுக்கும், எங்களுக்கும் என்ன வாய்க்கால், வரப்பு சண்டையா. கொள்கை முரண்பாடு தான் காரணம். நாங்க நல்லா இருக்க வேண்டும் என தி.மு.க., நினைக்காது,'' என, மதுரையில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ கூறினார்.
இரு நாட்களுக்கு முன் சட்டசபையில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, 'அ.தி.மு.க., எதிர்காலத்தை வேறு யாரோ தீர்மானித்துக்கொண்டிருக்கிறார்கள். கவனமாக இருங்கள்' என குறிப்பிட்டார்.
இதுகுறித்து நேற்று செல்லுார் ராஜூ கூறியதாவது: அ.தி.மு.க.,வில் நாங்கள் தான் எஜமானர்கள். யாருக்கும் அடிமை இல்லை. தங்கம் தென்னரசு சொன்னதை முதல்வர் ஸ்டாலினிடம் சொல்லி இருக்க வேண்டும்.
எங்களுக்கு கழித்தல், கூட்டல் குறித்து சொல்வதை விட, மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என அவர்கள் யோசிக்க வேண்டும். நான்காண்டுகளாக மாணவர்களுக்கு லேப்டாப் தராமல் தேர்தல் நெருங்குவதால் இப்போது அறிவித்திருக்கிறார்கள்.
அரசு ஊழியர்களுக்கு சரண்டர் விடுப்பு குறித்து நான் சட்டசபையில் பேசியதற்கு ஊழியர்கள் என்னை பாராட்டினர். 'எங்களுக்கு விடியல் கிடைக்காதா. நாங்கள் கொண்டு வந்த பாவத்தை நாங்கள் தான் தீர்க்க போறோம்' என்றனர். நான்கு ஆண்டுகளாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 3500 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்போவதாக கூறி 2800 பேர்தான் தேர்வு செய்தனர். அவர்களுக்கு இன்னும் பணி நியமனம் வழங்கப்படவில்லை.
இப்போது 1750 பேரை தேர்வு செய்யப் போவதாக கூறுகிறார்கள்.
தி.மு.க., எங்களை வீழ்த்தவே நினைக்கும். ஜெயலலிதா மீது பொய் வழக்கு போட்டது தி.மு.க.,தான். அவரை கொல்லவும் முயற்சித்தார்கள். அவர்களிடம் கரிசனம் எல்லாம் இருக்காது என்றார்.