Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மத்திய அரசின் சுற்றுலா பட்டியலில் மதுரை இல்லை: நடவடிக்கை எடுப்பாரா முதல்வர்

மத்திய அரசின் சுற்றுலா பட்டியலில் மதுரை இல்லை: நடவடிக்கை எடுப்பாரா முதல்வர்

மத்திய அரசின் சுற்றுலா பட்டியலில் மதுரை இல்லை: நடவடிக்கை எடுப்பாரா முதல்வர்

மத்திய அரசின் சுற்றுலா பட்டியலில் மதுரை இல்லை: நடவடிக்கை எடுப்பாரா முதல்வர்

ADDED : ஜூன் 13, 2025 02:48 AM


Google News
Latest Tamil News
மதுரை: மதுரை - அபுதாபி நேரடி விமான சேவை (இன்று) துவங்குவதை மதுரை விமான நிலைய ஆலோசனைக் குழு வரவேற்றாலும் மத்திய அரசின் சுற்றுலா பட்டியலில் மதுரை இல்லை, பல ஏமாற்றங்களை மதுரை மக்கள் சந்திப்பதாக குழு உறுப்பினர் ரத்தினவேலு தெரிவித்தார்.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 2017ல் அறிமுகப்படுத்திய மதுரை - சிங்கப்பூர் நேரடி விமான சேவைக்கு பயணிகளின் ஆதரவு இருந்தும் 2025 ஏப்ரலில் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் தென்மாவட்ட சுற்றுலா பயணிகள், தொழில் வணிகத் துறையினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 2024 அக்டோபர் முதல் மதுரை விமான நிலையம் 24 மணி நேரம் இயங்கும் என அறிவித்தாலும், இரவு நேர வெளிநாட்டு சேவையை எந்த விமான நிறுவனமும் இதுவரை அளிக்கவில்லை.

தற்போது மதுரையில் துபாய், இலங்கைக்கு மட்டுமே நேரடி விமான சேவை உள்ளது. சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, குவைத், ஐக்கிய அரபு நாடுகள், இந்தோனேசியா, கத்தார், புரூனே உள்ளிட்ட பல நாடுகளுக்கிடையே தொழில், வணிகம், சுற்றுலா, மருத்துவ சுற்றுலா என பயணிகள் அதிகம் செல்கின்றனர். மத்திய அரசின் கட்டுப்பாடால் அந்நாடுகளுக்கு மதுரையில் இருந்து நேரடி விமான சேவையளிக்க முடியவில்லை. அனுமதி வழங்க மத்திய விமானத்துறை அமைச்சகம் மறுக்கிறது என்கிறார் ரத்தினவேலு.

பட்டியலில் மதுரை இல்லை


அவர் கூறியதாவது:

சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, புரூனே, வியட்நாம், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மியான்மர், கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகள் அடங்கிய ஏசியான் கூட்டமைப்பு சார்பில், அந்த நாட்டு மக்கள் இந்தியாவில் சுற்றுலா மேற்கொள்ள 18 சுற்றுலா நகரங்களை மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. பாஷா எனப்படும் இருநாட்டு தரப்பு ஒப்பந்தம் இல்லாமலேயே ஏசியான் நாடுகளுக்கும், மத்திய அரசு பரிந்துரைத்த சுற்றுலா நகரங்களுக்கும் இடையே நேரடி விமான சேவை இயக்க முடியும். மதுரையில் மீனாட்சியம்மன் கோயில், சுற்றிலும் கொடைக்கானல், ராமேஸ்வரம், தனுஷ்கோடி, குற்றாலம், கன்னியாகுமரி என சுற்றுலா நகரங்கள் நிறைந்திருந்தாலும் மத்திய அரசின் சுற்றுலா பட்டியலில் மதுரை விமான நிலையம் இடம்பெறவில்லை.

சுற்றுலா நகர பட்டியலில் உள்ள கஜாராவோ நகரில் வெளிநாடு செல்வதற்கான விமான நிலையமே இல்லை. கண்ணுார், அயோத்தியா, சபரிமலை விமான நிலையங்களைக் கட்டுவதற்கு முன்பாகவே பன்னாட்டு விமான நிலையம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

சுற்றுலா நகர பட்டியலில் மதுரை சேர்க்கப்பட்டிருந்தால் ஏசியான் நாடுகளின் நேரடி விமான சேவை மதுரை விமான நிலையத்திற்கு கிடைத்திருக்கும். தென்தமிழக பொருளாதார வளர்ச்சி அதிகரித்திருக்கும். திட்டமிட்டே இந்த வாய்ப்பு மதுரைக்கு மறுக்கப்பட்டுள்ளது. வரும் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக ஏசியான் பட்டியலில் மதுரையை இடம்பெறச் செய்ய முதல்வர் ஸ்டாலின் முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us