காட்டுப்பன்றிகளால் பாழாகும் பயிர்கள்
காட்டுப்பன்றிகளால் பாழாகும் பயிர்கள்
காட்டுப்பன்றிகளால் பாழாகும் பயிர்கள்
ADDED : ஜூன் 13, 2025 02:49 AM

சோழவந்தான்: சோழவந்தான் பகுதிகளில் காட்டுப்பன்றிகள் அட்டகாசத்தால் பயிர்கள் பாழாகி தாங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
விவசாயி பெரியசாமி கூறியதாவது:
சோழவந்தான் வடகரை கண்மாய், கட்டக்குளம் கண்மாய் சுற்றுவட்டார தரிசு நிலப்பகுதிகளில் உள்ள கருவேலங்காடுகளில் ஏராளமான காட்டுப் பன்றிகள் உள்ளன.
அருகில் கண்மாய்களைச் சுற்றி பல ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.சாகுபடி காலங்களில் வயல் வரப்பில் வளரும் கோரைப் புற்களின் வேர்களில் உள்ள கிழங்கை உண்பதற்காக காட்டுப் பன்றிகள் கூட்டம், கூட்டமாக வயல்வெளிக்கு வருகின்றன.
அப்போது சாகுபடி பயிர்களை சேதப்படுத்தி செல்கின்றன. நெற்பயிர்களை உண்ணாத பன்றிக் கூட்டங்கள், பயிர்கள் மெத்தை போன்று இருப்பதால் படுத்து உருள்கின்றன.
இதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டமடைகின்றன.
நாணல் புதருக்குள் ஒளிந்து இருக்கும் பன்றிக் கூட்டம், அவ்வப்போது அவ்வழியோ நடந்து செல்லும் விவசாயிகளை மிரட்டி முட்டித் தாக்கவும் செய்கின்றன.
வனத்துறையினர் பன்றிகளை காட்டுப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.