ADDED : ஜூன் 13, 2025 02:48 AM
உசிலம்பட்டி: உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பாக தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டச் செயலாளர் விருமாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலை உறுதியளிப்புத்திட்ட அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் 200 நாள் வேலை, தினசரி ரூ.336 சம்பளம் வழங்க வேண்டும், வீடு இல்லாதோருக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலையை திறக்க நடவடிக்கை, பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும், 58 கிராம கால்வாய் திட்டத்திற்கு நிரந்தர அரசாணை வழங்க வேண்டும், உசிலம்பட்டி பஸ்ஸ்டாண்ட் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடந்தது.