ADDED : ஜூன் 07, 2025 04:45 AM
கோயில்
வைகாசி வசந்த விழா - சிறப்பு அலங்காரம் பூஜைகள் செய்து அம்மன், சுவாமி புதுமண்டபத்தில் எழுந்தருளல்: மீனாட்சிஅம்மன் கோயில், மதுரை, மாலை 6:00 மணி.
வைகாசி பெருந்திருவிழா 6ம் நாள்: கூடலழகர் கோயில், மதுரை, திருப்பல்லக்கு - பழங்காநத்தம் கோனார் மண்டபத்திற்கு சுவாமி எழுந்தருளல், காலை 6:30 மணி, யானை வாகனத்தில் மண்டபத்திலிருந்து புறப்பாடு, அதிகாலை 12:00 மணி.
வைகாசி வசந்த உற்ஸவம் 8ம் நாள் - முருகன் கோயில், சோலைமலை, அழகர்கோவில், சண்முகார்ச்சனை, காலை 11:00 மணி, மகா அபிஷேகம், மதியம் 3:00 மணி.
வைகாசி வசந்த உற்ஸவம்: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், அலங்காரம், பூஜைகள், இரவு 7:15 முதல்.
வைகாசி பிரமோற்சவம் : காளமேகப் பெருமாள் கோயில், திருமோகூர், வைரச்சப்பரத்தில் வீதி புறப்பாடு, இரவு 7:00 மணி.
வைகாசி விழா : திரவுபதி அம்மன் கோயில், தெற்கு மாரட் வீதி, மதுரை, திருப்பல்லக்கு - பராசக்திஅம்மன் அலங்காரம், காலை 10:30 மணி முதல், அரவான் பூஜை சிம்ம வாகனம், காளியம்மன் அலங்காரம், மாலை 6:30 மணி முதல்.
கும்பாபிஷேகம் - விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, யாகசாலை ஆரம்பம்: சிவசக்தி விநாயகர் கோயில், ஊர்மெச்சிக்குளம், மாலை 6:40 மணிக்கு மேல்.
வைகாசி விழா : பத்ரகாளி மாரியம்மன், திருமங்கலம், வெள்ளிச்சப்பரத்தில் மாரியம்மன் நகர்வலம், நாட்டாண்மை நல்ல தம்பி நாடார் பங்காளிகள் மண்டகப்படி சேர்தல், காலை 8:30 மணி, புஷ்ப பல்லக்கில் மாரியம்மன் நகர்வலம், இரவு 10:00 மணி.
வைகாசி மாத புரவி எடுப்பு திருவிழா: அய்யனார் கோயில், தனியாமங்கலம், மாலை 4:00 மணி.
பக்தி சொற்பொழிவு
தாயுமானவர் பாடல்கள்: நிகழ்த்துபவர் -- கண்ணன், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு : மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.
லலிதா ஸகஸ்ரநாம பாராயணம் : நிகழ்த்துபவர் - - பிரசிதானந்தா சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, ரமணரின் சத்தர்ஸனம் விளக்கவுரை, காலை 7:00 மணி முதல்.
சத்ஸங்கம்: நிகழ்த்துபவர் -- ஹரிதாஸ், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, மதுரை, இரவு 7:00 முதல் 8:30 மணி வரை.
பொது
கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறப்பு: பாலமந்திரம் பள்ளி, விஸ்வநாதபுரம், மதுரை, பங்கேற்பு: அமைச்சர் மூர்த்தி, காலை 9:00 மணி.
மாற்றுத்திறனாளிகளுக்கு டூவீலர் வழங்குதல்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் சங்கீதா, பங்கேற்பு: அமைச்சர் மூர்த்தி, ஏற்பாடு: மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை, மதியம் 3:00 மணி.
மருத்துவம்
இலவச கண் மருத்துவ முகாம்: சங்கரா கண் மருத்துவமனை, பஞ்சாயத்து ஆபீஸ், தென்கரை, காலை 9:00 முதல் 1:00 மணி வரை.
இலவச கண் மருத்துவ முகாம்: சங்கரா கண் மருத்துவமனை, அக்கசாலை விநாயகர் கோயில் முன்பு, வளையல்காரத்தெரு, சோழவந்தான், காலை 9:00 முதல் 1:00 மணி வரை.
தியானம்
ராஜயோக தியான பயிற்சி: பிரஜா பிரதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், சத்திரப்பட்டி, மாலை 5:30 முதல் 6:30 மணி வரை.
கண்காட்சி
அரசு பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்பு துறை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.