/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குழந்தைகளுக்கான மையம் துவக்க வாய்ப்பு குழந்தைகளுக்கான மையம் துவக்க வாய்ப்பு
குழந்தைகளுக்கான மையம் துவக்க வாய்ப்பு
குழந்தைகளுக்கான மையம் துவக்க வாய்ப்பு
குழந்தைகளுக்கான மையம் துவக்க வாய்ப்பு
ADDED : ஜூன் 07, 2025 04:44 AM
மதுரை: மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கு புற உலக சிந்தனையற்ற (ஆட்டிஸம்) குழந்தைகளுக்கான ஆரம்ப கால பயிற்சி மையம் ( 0 - 6 வயதுக்குட்பட்டோர்) நடத்த விரும்பும் தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
மாற்றுத்திறனாளிகள் நலச்சட்டத்தில் பதிவு செய்யப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் ஏதேனும் திட்டத்தை மாற்றுத் திறனாளிகளுக்காக செயல்படுத்திய அனுபவம் பெற்ற நிறுவனமாக இருக்க வேண்டும்.
தரைத்தளத்தில் குறைந்தபட்சம் 1500 சதுர அடி இடவசதி இருக்க வேண்டும்.
இத்திட்டத்தை செயல்படுத்த விரும்பும் நிறுவனங்கள் ஜூன் 15 க்குள் நேரில் அல்லது தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு 0452- 252 9695 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.