ADDED : ஜூன் 07, 2025 04:45 AM
மதுரை: மதுரை ரயில்வே கோட்டம் சார்பில் உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 200 மரக்கன்றுகள் நடப்பட்டன.
ரயில்வே குடியிருப்பில் குறைந்த இடத்தில் அடர்த்தியான பசுமைக் காடுகளை உருவாக்கும் வகையில் ஜப்பானின் மியாவாகி முறைப்படி மரக்கன்றுகள் நடப்பட்டன.
கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா, கூடுதல் மேலாளர் ராவ் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் மரக்கன்றுகளை நட்டனர். நீர் சேமிப்பு, மரம் வளர்த்தல், வாழும் பூமியை காத்தல் போன்ற கருத்துகளை வலியுறுத்தி டி.வி.எஸ்., குழுமம் சார்பில் ரயில்வே ஸ்டேஷனில் 'மைம்' நடத்தப்பட்டது.