ADDED : மார் 23, 2025 03:59 AM
உசிலம்பட்டி : உசிலம்பட்டி - வில்லாணி ரோட்டில் பெட்டிக்கடை நடத்துபவர் அன்புவள்ளி 48. நேற்று காலை கடைக்கு ஹெல்மெட் அணிந்தபடி வந்த நபர் சிகரெட் வாங்குவது போல் தங்கச் செயினை பறித்தார். அவருடன் அன்புவள்ளி போராடினார்.
சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் ஓடி வருவதை பார்த்த அந்நபர் தப்பிக்க முயன்றார். அவரது ஹெல்மெட்டை அன்புவள்ளி கழட்டி முகத்தை பார்ப்பதற்குள் தப்பி ஓடி, டூவீலரில் காத்திருந்த நபருடன் தப்பிச் சென்றார். இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.