/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மார்ச் 31க்குள் கரும்புக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல் மார்ச் 31க்குள் கரும்புக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்
மார்ச் 31க்குள் கரும்புக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்
மார்ச் 31க்குள் கரும்புக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்
மார்ச் 31க்குள் கரும்புக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்
ADDED : மார் 23, 2025 04:00 AM
மதுரை : கரும்பில் மகசூல் இழப்பை தவிர்க்கும் வகையில் சாகுபடி செய்துள்ள கரும்பு விவசாயிகள் மார்ச் 31க்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என வேளாண் துறை இணை இயக்குநர் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் 2024 - 25 க்கான ராபி பருவத்தில் கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் மகசூல் இழப்பை தவிர்க்க காப்பீடு செய்வது அவசியம். ஏக்கருக்கு ரூ.1201 வீதம் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், தேசிய வங்கிகளில் செலுத்தி பதிவு செய்யலாம்.
பதிவு செய்யும்போது விவசாயி பெயர், முகவரி, நிலப்பரப்பு, சர்வே எண், உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம், வங்கிக்கணக்கு எண்ணை சரிபார்த்து பதிவு செய்ய வேண்டும் என்றார்.