ADDED : மார் 23, 2025 03:59 AM
மதுரை : உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு வைகை நதி மக்கள் இயக்கம், வைகை அறக்கட்டளை சார்பில் வைகை ஆற்றை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
நிர்வாகி ராஜன் தலைமை வகித்து பேசுகையில், ''அனைத்து உயிரினங்களுக்கும் தண்ணீர் வாழ்வாதாரமாக உள்ளது. மனிதனால் தான் நீர்நிலைகள் பாதிப்படைகின்றன. நதிகளை பாதுகாக்க அரசுடன் மக்களும் ஒத்துழைத்தால் மட்டுமே வருங்கால சந்ததிகளுக்கு குடிநீர் கிடைக்கும்'' என்றார்.
இயக்க ஆலோசகர் இல.அமுதன், நிர்வாகி பார்த்தசாரதி, அறக்கட்டளை நிறுவனர் அண்ணாத்துரை, கூடுதல் அரசு வழக்கறிஞர் அன்புநிதி, வி.கே.சி., அறக்கட்டளை நிறுவனர் மஞ்சுகணேஷ், கல்வியாளர் ஆழ்வார் ராஜா, சுகாதார ஆய்வாளர் ரமேஷ், வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன், கலாம் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிர்வாகிகள் மணிகண்டன், சரவணன், ஆறுமுகம், செந்தில் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
அமெரிக்கன் கல்லுாரி, மதுரைக் கல்லுாரியைச் சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், என்.எஸ்.எஸ்., ஆசிரியர்கள் நீர் நிலைகளை பாதுகாக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டு வைகை நதியை சுத்தம் செய்தனர்.