/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஞானத்தை பெற்றுவிட்டால் வாழ்க்கை ரகசியம் தெரிந்துவிடும்: குரு மித்ரேஷிவா பேச்சுஞானத்தை பெற்றுவிட்டால் வாழ்க்கை ரகசியம் தெரிந்துவிடும்: குரு மித்ரேஷிவா பேச்சு
ஞானத்தை பெற்றுவிட்டால் வாழ்க்கை ரகசியம் தெரிந்துவிடும்: குரு மித்ரேஷிவா பேச்சு
ஞானத்தை பெற்றுவிட்டால் வாழ்க்கை ரகசியம் தெரிந்துவிடும்: குரு மித்ரேஷிவா பேச்சு
ஞானத்தை பெற்றுவிட்டால் வாழ்க்கை ரகசியம் தெரிந்துவிடும்: குரு மித்ரேஷிவா பேச்சு
ADDED : ஜூன் 24, 2024 04:27 AM
கே.புதுார் : 'ஒருவர் ஞானத்தை பெற்றுவிட்டால் வாழ்க்கையின் அத்தனை ரகசியங்களும் தெரிந்துவிடும்' என குரு மித்ரேஷிவா பேசினார்.
மதுரை கே.புதுாரில் மாதங்கி நிறுவனத்தின் 'அல்கெமி' அறிமுக வகுப்பு நடந்தது. நிறுவன தொண்டர் சேவியர் வரவேற்றார். 'நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றா' என்னும் தலைப்பில் குரு மித்ரேஷிவா பேசியதாவது:ஞானத்துக்கும் அறிவுக்கும் அடிப்படை வித்தியாசம் உள்ளது. அறிவானது பார்த்தல், கேட்டல், படித்தல் மூலம் வெளியில் இருந்து பெறப்படுவது. ஞானம் நமக்குள் இருந்து வெளிப்படுவது. அன்று ஞானத்தை குருகுலக்கல்வி முறை கற்றுத் தந்தது. இன்று கல்விமுறை பணம் சம்பாதிக்க மட்டுமே கற்றுக் கொடுக்கிறது.அறிதல் என்பது அறிவு சார்ந்தது, புரிதல் என்பது ஞானம் சார்ந்தது. ஞானத்தை ஒருவர் பெற்றுவிட்டால் வாழ்க்கையின் அத்தனை ரகசியங்களும் தெரிந்துவிடும். வாழ்க்கையின் அனைத்து நிகழ்வும் தற்செயலாக அன்றி ஏதோ ஒரு காரணத்தோடு தான் நடக்கிறது.இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இருப்பதுபோன்ற ஞானம், பொக்கிஷம் வேறு எந்த நாட்டிலும் இல்லை. வெளிநாடுகளில் நம் திருமுறைகள், சிவபுராணம், பெரியபுராணத்தை ஆராய்கின்றனர்.உடல் பற்றிய புரிதல் இல்லாததால் உடல் சார்ந்த பிரச்னையும், மனம் பற்றிய புரிதல் இல்லாததால் உளவியல் சார்ந்த பிரச்னைகளும் வருகிறது. உலக மக்கள் சராசரியாக 1 - 1.5 சதவீதம் மட்டுமே தங்கள் திறன்களை வெளிப்படுத்துவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.