ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு
ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு
ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு
ADDED : ஜூன் 24, 2024 04:27 AM
மதுரை : தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தேர்தல் மதுரையில் நடந்தது.
தேர்தல் ஆணையாளராக முன்னாள் மாநில தலைவர் மோசஸ், துணை ஆணையாளராக முன்னாள் மாநில பொருளாளர் ஜீவானந்தம் செயல்பட்டனர். மூன்று ஆண்டுகளுக்கான மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.மாநில தலைவராக மணிமேகலை, பொதுச் செயலாளராக மயில், பொருளாளராக கணேசன், துணைப் பொதுச் செயலாளராக முருகன், இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினராக டேவிட்ராஜன் தேர்வு செய்யப்பட்டனர்.மாநில துணைத் தலைவர்களாக பிரசன்னா, சசிகுமார், ஆரோக்கியராஜ், கிருஷ்ணவேணி, தங்கபாசு, வீரமணி, அறிவழகன், ரஞ்சன் தயாளதாஸ், அமர்நாத், செயலாளராக பேச்சியம்மாள், ராஜ்குமார், கிருஷ்ணசாமி, ஜெயராஜ், சுனில்குமார், கண்ணதாசன், சுதா, ஞானசேகரன், சத்தியநாதன் தேர்வு செய்யப்பட்டனர். ஏற்பாடுகளை கிளைத் தலைவர் முருகேசன், செயலாளர் சீனிவாசகன், பொருளாளர் எமிமாள், செயற்குழு முருகேசன் செய்திருந்தனர்.