Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/நான்கு தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைவது எப்போது 6 ஏக்கர் கிடைப்பதில் சிக்கல்

நான்கு தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைவது எப்போது 6 ஏக்கர் கிடைப்பதில் சிக்கல்

நான்கு தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைவது எப்போது 6 ஏக்கர் கிடைப்பதில் சிக்கல்

நான்கு தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைவது எப்போது 6 ஏக்கர் கிடைப்பதில் சிக்கல்

ADDED : பிப் 25, 2024 04:01 AM


Google News
மதுரை : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மதுரை மாவட்டத்தில் 9 இடங்களில் மினி ஸ்டேடியம் அமைக்க கடந்தாண்டு ரூ. 27 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் நான்கு தொகுதிகளுக்கான இடங்கள் இதுவரை தேர்வு செய்யப்படவில்லை.

மதுரை வடக்கில் ரேஸ்கோர்ஸ் மைதானம் தவிர மீதமுள்ள 9 தொகுதிகளில் தலா ரூ. 3 கோடி செலவில் மினி ஸ்டேடியம் அமைக்க திட்டமிடப்பட்டது.

மதுரை கிழக்கில் சங்கிமங்கலம், உசிலம்பட்டியில் சீமானுாத்து, திருமங்கலத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி, மேலுாரில் அய்யாப்பட்டியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சோழவந்தானுக்கு சின்ன இலந்தைகுளத்தில் 6 ஏக்கரில் பணி தொடங்கிவிட்டது.

400 மீட்டர் தடகள டிராக், கால் பந்து, கூடைபந்து, வாலிபால், கபடி அரங்கு, விளையாட்டு அலுவலகம், பார்வையாளர் காலரி, கழிப்பறை வசதி அமைக்கப்பட உள்ளன. ஆனால் மதுரை மேற்கு, தெற்கு, மத்தி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு தற்போது வரை இடம் தேர்வு செய்யப் படவில்லை. மொத்தமாக 6 ஏக்கர் நிலம் கிடைக்காததால் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட தொகை வீணாக திரும்பச் செல்லும் முன்பாக ஆணையம் சார்பில் விரைவில் இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என விளையாட்டு வீரர் வீராங்கனைகள் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us