ADDED : ஜன 04, 2024 02:34 AM

பாலமேடு; பாலமேடு சாத்தையாறு அணை ஒரு மாதத்திற்கு மேலாக மறுகால் பாய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான திண்டுக்கல் சிறுமலை பகுதியில் தொடரும் மழையால் ஓடைகளில் நீர் வரத்து உள்ளது. நவ.,30ல் மறுகால் பாய்ந்த அணை தற்போது ஒரு மாதத்திற்கு மேலாக மறுகால் செல்கிறது. இப்போது அணைக்கு 10 கன அடி வரத்து நீர் வெளியேறி வருகிறது. இந்த அணை மூலம் கீழச்சின்னம்பட்டி, எர்ரம்பட்டி, சுக்காம்பட்டி, குறவன்குளம் உள்ளிட்ட 10 கண்மாய்கள் பாசன வசதி பெறுகின்றன. ஓடைகளில் தண்ணீர் தொடர்ந்து செல்வதால் கிராமப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.