ADDED : பிப் 24, 2024 04:00 AM
மதுரை : மேலுார் தாலுகா கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் பிப்.,27 ல் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடக்கிறது. அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 10:00 மணிக்கு நடக்கும் முகாமில் பங்கேற்போருக்கு மருத்துவ சான்றிதழ் வழங்கப்படும். அதனடிப்படையில் அடையாள அட்டை அன்றே வழங்கப்படும்.
அதேபோல தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கான (யூ.டி.ஐ.டி., கார்டு) விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதனை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த ஒன்றிய பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மனுக்களுடன் கலந்து கொள்ளலாம். அடையாள அட்டை கோருவோர், ஏற்கனவே சிகிச்சை பெற்ற ஆவணங்களான எக்ஸ்ரே, ஸ்கேன், 4 போட்டோக்கள், ஆதார் அட்டை நகலுடன் கலந்து கொள்ள வேண்டும். அடையாள அட்டை வைத்திருப்போர் அதனுடனும், ஆதார் அட்டையுடனும் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்க பட்டுள்ளது.